முக்கிய பிரச்சனையில் சிக்கிய முன்னணி கதாநாயகன் – திரையுலகத்தினர் அதிர்ச்சி!!

0

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் முக்கிய இளம் நடிகர் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சையில் நடிகர்:

தெலுங்கு திரை உலகத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் இளம் நடிகர் நாக சவுரியா.  வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் இவரும் ஒருவர்.  இவர் நடிகை சாய் பல்லவியுடன் இணைந்து தியா என்ற படத்தில் நடித்திருந்தார்.  இதையடுத்து, தற்போது ஒரு சில படங்களில் பணியாற்றி வருகிறார்.  இந்த நிலையில், இவருக்கு சொந்தமான ஐதராபாத் அவுட்டர் ரிங் ரோடு மஞ்சுரேவுலாவில் உள்ள இவரது பண்ணை வீட்டில் சில சமூக விரோத செயல்கள் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து , போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அங்கு சூதாட்டம் நடந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இது போக, நாக சவுரியாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இதையடுத்து, தற்போது நடிகருக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here