கல்வித்துறையில் காலிப்பணியிடங்கள்., கிரீன் சிக்னல் காட்டிய முதல்வர்! அமைச்சர் அறிவிப்பு!!

0
கல்வித்துறையில் காலிப்பணியிடங்கள்., கிரீன் சிக்னல் காட்டிய முதல்வர்! அமைச்சர் அறிவிப்பு!!
கல்வித்துறையில் காலிப்பணியிடங்கள்., கிரீன் சிக்னல் காட்டிய முதல்வர்! அமைச்சர் அறிவிப்பு!!

கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப, முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும், விரைந்து இவை முடிக்கப்படும் என்றும் தெலுங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

அமைச்சர் அறிவிப்பு:

கொரோனா பெருந்தொற்றுகுப் பின்பு, அரசின் முக்கியத் துறைகளில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தும் போட்டித் தேர்வு மற்றும் கலந்தாய்வு அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநில கல்வித்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளது. இவற்றை நிரப்ப தெலுங்கானா முதல்வர் அனுமதி அளித்துள்ளதாக, தெலுங்கானா மாநில சுகாதார மற்றும் நிதி அமைச்சர் ஹரிஷ் ராவ் அறிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கல்வித்துறையில் துணை டிஇஓ மற்றும் டிஇஓ ஆகிய பணியிடங்களை நிரப்ப நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், விரைவில் இவை நிரப்பப்படும் என்றும் அறிவித்தார். இது போக மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள பார்மசி, நர்சிங் மற்றும் மருத்துவர்களுக்கான காலி பணியிடங்கள் அனைத்தும் சுகாதாரத்துறை மூலம் விரைவில் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இலவச நீட் தேர்வு பயிற்சி நவ.. 26 ல் ஆரம்பம்.., பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

இதுபோக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கவும், இடம் மாறுதல் கலந்தாய்வு நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பால் பல, இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறலாம் என எண்ணப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here