அடுத்தடுத்து உயிரிழந்த திமுக எம்.எல்.ஏ.,க்கள் – கலக்கத்தில் கட்சி நிர்வாகம்..!

0

தமிழக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திமுக.,வை சேர்ந்த காத்தவராயன் இன்று அதிகாலை இயற்கை எய்தினார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதனால் திமுக நிர்வாகம் மற்றும் தொண்டர்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர்.

திருமணமாகாத எம்.எல்.ஏ.,

குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் திருமணம் செய்து கொள்ளாமல் தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இருதய பாதிப்பினால் அவதிப்பட்ட இவருக்கு ஓபன் ஹார்ட் சர்ஜெரி செய்யப்பட்டது. அப்போது முக ஸ்டாலின் அவரது வீட்டிற்கே சென்று நலம் விசாரித்தார். இந்நிலையில் காத்தவராயனின் மரணம் அக்கட்சியினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

நேற்று திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் காலமானார். தற்போது இன்னொரு திமுக எம்.எல்.ஏ., வும் உடல்நலக்குறைவினால் உயிரிழந்திருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here