தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு பொருள் வழங்குவது நாளை நிறுத்தம் – ரேஷன் கார்டு தாரர்கள் அதிர்ச்சி!!

0

தமிழக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்பு பொருள் வழங்குவது நாளை நிறுத்தப்படுமா? என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

நாளை நிறுத்தமா ?

தமிழக அரசால் ஆண்டு தோறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், இந்த வருடம் பொங்கல் பொருட்களுடன் சேர்த்து 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கப்படும் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அண்மையில் துவக்கி வைத்தார். இதனால், நுகர்வோர்களுக்கு ரேஷன் கடைகளில் இந்த பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான, முன்னேற்பாடாக பொது மக்களுக்கு வீடு தோறும் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், நாளை (09-01-2022) ஞாயிறு பொது முடக்கம் காரணமாக பொங்கல் தொகுப்பு திட்டமிட்டபடி வழங்கப்படுமா? என்ற கேள்வி மக்களிடம் இருந்து வந்தது. இந்நிலையில், இதற்கு மாற்று ஏற்பாடாக நாளை பொருட்கள் வாங்கவிருந்த மக்கள் வேறு நாட்களில் தங்கள் பொருட்களை ரேஷன் கடையில் பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த பொருட்களில் ஏதேனும் குறைகள் இருந்தால், 18005993540 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here