ஆன்லைனில் வகுப்பு இல்லை, டிவி மூலம் தான் – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

0
minister sengottaiyan
minister sengottaiyan

தமிழகத்தில் தனியார் பள்ளி மாணவர்களைப் போல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் வரும் ஜூலை 13ம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்து இருந்தார். தற்போது அது குறித்து சில விளக்கங்களை அவர் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் வகுப்புகள்:

தமிழகத்தில் 3 மாதத்திற்கு மேலாக கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை சரி செய்யும் பொருட்டு தனியார் பள்ளிகள் சார்பில் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் ஊரடங்கு நாட்களை பயனுள்ள முறையில் அவர்கள் செலவிட முடிகிறது. ஆனால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இத்தகைய வசதிகள் செய்யப்படாததால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வந்தது.

மாவட்ட ஆட்சியர் முன்பு அரசு ஊழியர் தீக்குளிப்பு – திண்டுக்கல்லில் பரபரப்பு..!

Online Class
Online Class

இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஜூலை 13ம் தேதி முதல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளைப் போன்று ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்து இருந்தார். ஆனால் பல மாணவர்களிடம் ஆன்லைனில் கல்வி கற்பதற்கான தேவையான இணைய வசதி இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் எவ்வாறு ஆன்லைனில் பாடம் கற்பிக்க முடியும் என எழுந்த சந்தேகத்திற்கு அமைச்சர் விளக்கம் அளித்து உள்ளார். அதாவது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு டிவி வாயிலாக பாடம் கற்பிக்கப்படும் எனவும் ஆன்லைன் மூலம் இல்லை என அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here