தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – உங்கள் மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்காங்கனு தெரியுமா..?

0
56

நடப்பாண்டிற்கான (2020) இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டு உள்ளது. அதன் படி தமிழகத்தில் மொத்தம் 6,13,06,638 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் – 3,02,54,172, பெண்கள் – 3,10,45,969, மூன்றாம் பாலினத்தவர்கள் – 6,497 பேர் வாக்காளர்களாக உள்ளனர் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

மேலும் ஒவ்வொரு மாவட்ட வாரியாகவும் உள்ள புது வாக்காளர்கள் என அனைத்தும் கணக்கெடுக்கப்பட்டு புது வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

மதுரை மாவட்டம்:

மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

மொத்த வாக்காளர்கள் – 26,43,305 பேர்
ஆண் வாக்காளர்கள் – 13, 02 ,700 பேர்
பெண் வாக்காளர்கள் – 13,40, 435 பேர்
மூன்றாம் பாலினத்தவர்கள் – 170 பேர்

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

நாகை மாவட்டம்:

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

மொத்த வாக்காளர்கள் – 13,04,544 பேர்
ஆண் வாக்காளர்கள் – 6,42,630 பேர்
பெண் வாக்காளர்கள் – 6,61,871 பேர்
மூன்றாம் பாலினத்தவர்கள் – 43 பேர்

திருப்பூர் மாவட்டம்:

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

மொத்த வாக்காளர்கள் – 23,01,481 பேர்
ஆண் வாக்காளர்கள் – 11,41,756 பேர்
பெண் வாக்காளர்கள் – 11,59,448 பேர்
மூன்றாம் பாலினத்தவர்கள் – 277 பேர்

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஈரோடு மாவட்டம்:

ஈரோடு மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் சி. கதிரவன் வெளியிட்டார்.

மொத்த வாக்காளர்கள் – 19,25,668 பேர்
ஆண் வாக்காளர்கள் – 9,41,179 பேர்
பெண் வாக்காளர்கள் – 9,84,395 பேர்
மூன்றாம் பாலினத்தவர்கள் – 94 பேர்

திருச்சி மாவட்டம்:

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அவர்களால் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

மொத்த வாக்காளர்கள் – 22,97,106 பேர்
ஆண் வாக்காளர்கள் – 11,18,900 பேர்
பெண் வாக்காளர்கள் – 11,77,997 பேர்
மூன்றாம் பாலினத்தவர்கள் – 209 பேர்

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

கள்ளக்குறிச்சி மாவட்டம்:

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்களால் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

மொத்த வாக்காளர்கள் – 27,53,128 பேர்
ஆண் வாக்காளர்கள் – 13,73,932 பேர்
பெண் வாக்காளர்கள் – 13,78,796 பேர்
மூன்றாம் பாலினத்தவர்கள் – 400 பேர்

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here