தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிர்பலி – குறையும் பாதிப்பு எண்ணிக்கை!!

0
corona updates
corona updates

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் இன்னும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் தொற்று பரவிக் கொண்டுதான் இருக்கிறது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து மேலும் அதிகரித்து வருகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் இணைய கிளிக் பண்ணுங்க!!

5000த்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 5,063 பேர் பாதிப்பு அடைந்துள்ளார்கள் இன்று பாதிக்கப்பட்டவர்களில் 3041 பேர் ஆண்கள், 2022 பேர் பெண்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல் 6,501 பேர் தமிழகத்தில் இன்று மட்டும் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 2,08,784 ஆக அதிகரித்துள்ளது.

corona updates
corona updates

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று 108 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தற்போது வரை 4,349 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மையங்கள் 125 எண்ணிக்கை ஆக அதிகரித்துள்ளது. இதுவரை பரிசோதனை மையங்கள் மூலம் 28,92,395 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.சென்னையில் இன்று மட்டும் 1,023 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,04,027 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல, கோவையில் இன்று மேலும் 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona updates
corona updates

இதன் மூலம் கோவையில் தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,688 ஆக அதிகரித்துள்ளது.மேலும், நீலகிரியில் புதிதாக 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நீலகிரியில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 863 ஆக உயர்ந்துள்ளது.அதேபோல, திருப்பூரில் புதிதாக 8 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருப்பூரில் கொரோனா தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,000 ஆக உயர்ந்துள்ளது.

தெரு நாய்க்கு ‘சேல்ஸ் மேன்’ பணி வழங்கிய ஹூண்டாய் நிறுவனம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here