விஜய் காங்கிரஸிற்கு வந்தால் வரவேற்போம், ஆனால் அழைப்பு எதுவும் விடுக்கவில்லை – தமிழக காங்கிரஸ்..!

0

நடிகர் விஜய் அரசியலில் நுழையும் போது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் அவரை முழு மனதுடன் வரவேற்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்து உள்ளார்.

எதிர்ப்பும், ஆதரவும்..!

நடிகர் விஜய் அவரது படங்களின் இசை வெளியீட்டு விழாவில் பேசுவது சர்ச்சையை கிளப்புவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் பிகில் பட ஆடியோ லான்ச்சில் பேசிய அவர் ஆளுங்கட்சியான அதிமுக-வினை மறைமுகமாக தாக்கினார். அப்போது ‘யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ அவரை அங்கே உட்கார வைத்தீர்கள் என்றால் எல்லாம் சரியாக இருக்கும்’ என பேசியதற்கு அதிமுக-வினர் பெரும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆனால் அந்த நிகழ்வின் போதும், விஜய் வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்டின் போதும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி விஜய்க்கு ஆதரவாக பேசினார். இந்நிலையில் நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் அவரை மனதார ஏற்றுக் கொள்வோம் ஆனால் அவருக்கு அழைப்பு எதுவும் நாங்கள் விடுக்கவில்லை என அவர் தெரிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here