விரைவில் அமலுக்கு வரும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு – முதல்வர் அறிவிப்பு!!

0

வருகின்ற ஜனவரி 1 2022 முதல் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்துள்ளார்.

முதல்வர் அறிவிப்பு:

தமிழக சட்டப்பேரவை சில நாட்களுக்கு முன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் தொடங்கி முதல்வர் மற்றும் சபாநாயகர் முன்னிலையில் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் துறை சார்ந்த அறிவிப்புகளும், புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில், நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குதல் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இந்த நிலையில், இன்று தொடங்கிய சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதாவது, அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் வருகின்ற  ஜனவரி 1 2022 முதல் அகவிலைப்படி வழங்கப்படும் என்று அறிவித்தார்.  மேலும், இதனால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இதோடு சேர்த்து, சத்துணவு ஊழியர்களின் ஓய்வு வயதை  60 ஆக  உயர்த்துவதாகவும் அறிவித்துள்ளார்.  இதற்கு முன்பு, கடந்த ஆட்சியில் அரசு ஊழியர்களின் பதவிக்காலம் 60 வயது வரை அதிகரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தகுந்தது.  இந்த நிலையில், முதல்வரின் இந்த அறிவிப்பு பொது மக்களிடம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here