சட்ட சபையில் கேள்வி நேரம் உருவாக்கம் – முதல் முறையாக இந்த கேள்வி நேரத்தில் பதிலளித்தார் முதல்வர்!

0

தமிழக சட்டமன்ற வரலாற்றில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கேள்வி நேரத்தில் தன் துறை சார்ந்த கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று பதிலளித்தார்.

கேள்வி நேரம்:

தமிழக சட்டசபை கூட்டத்தொடர்  சில நாட்களுக்கு முன் தொடங்கி  நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு செவ்வாய் கிழமையான இன்று  தொடங்கிய அவை முதல்வர் மற்றும் சபாநாயகர் முன்னிலையில் நடந்தது. இதில்,  துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.

இந்த விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஆளும் கட்சி அமைச்சர்கள் பதிலளிப்பார்கள். இதற்காக, சபையில்  கேள்வி நேரம் ஒதுக்கப்படும்.  இந்த ஒதுக்கப்பட்ட கேள்வி நேரத்தில், உறுப்பினர்கள் தங்கள் கேள்விகளை முன்வைப்பார்கள்.  இந்த கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் தங்கள் பதிலை அளிப்பார்கள்.   இது மட்டுமல்லாமல், முதல்வரின் துறை சார்ந்த கேள்விகளுக்கு தனது சட்டப்பேரவை 110 விதியின் கீழ் பதிலளிப்பார்.

 

இது கடந்த 10 ஆண்டு ஆட்சி காலத்தில் இல்லை. அதாவது முதல்வரின் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் கேள்வி நேரம் வழங்கப்படவில்லை.  முதல்வர் தனி பிரிவின் கீழ் தான் முந்தைய முதல்வர் பதிலளித்து வந்தார். இதையடுத்து, தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக கேள்வி நேரத்தில் தன் துறை சார்ந்த கேள்விக்கு முதலமைச்சர் பதிலளித்தார்.

அதாவது, பாஜக உறுப்பினர் தமிழகத்தில் போதை பொருள் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளதாக பேசிய போது, அதற்கு பதில் தர எழுந்த ஸ்டாலின் இந்த போதை பொருளை தடுக்கும் முறையான சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக அறிவித்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் சிறப்பு வாய்ந்த கேள்வி நேரத்தில் முதல்வர் பேசியிருப்பது தமிழக சட்டமன்றத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here