நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் இரண்டே நாளில் 100 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
அண்ணாத்த படத்தின் சாதனை :
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான படம் அண்ணாத்த. கீர்த்தி சுரேஷ், மீனா குஷ்பூ, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்த இந்த படம் தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. தற்போது இந்த படத்தின் இரண்டு நாள் வசூல் குவித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
அதாவது இந்த படம் திரையிடப்பட்ட முதல் நாளில் 70.19 கோடியும், இரண்டாவது நாளில் 42.63 கோடியும் வசூல் செய்துள்ளது. இந்த இரண்டு நாட்களையும் சேர்த்து, சுமார் 119.82 கோடி வசூல் செய்து இமாலய வெற்றி அடைந்துள்ளதாக திரைதுறையினர் கொண்டாடி வருகின்றனர். இதனை அடுத்து தலைவரின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்