விதிகளை மீறும் வாகனங்கள்.., “இனி ஓட்டவும் முடியாது ஒளியவும் முடியாது”…, போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட முக்கிய அப்டேட்!!

0
விதிகளை மீறும் வாகனங்கள்..,
விதிகளை மீறும் வாகனங்கள்.., "இனி ஓட்டவும் முடியாது ஒளியவும் முடியாது"..., போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட முக்கிய அப்டேட்!!

நாடு முழுவதும் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில், குறிப்பாக விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை படம் பிடித்து, அதனை வாகன கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பும் வகையில் கேமராக்களை தமிழகத்தின் முக்கிய இடங்களில் அரசு பொருத்தி உள்ளது. இதன் மூலம், விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், சென்னையில் மட்டும் கடந்த 4 மாதங்களில் ரூ.5.84 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும், சாலை விபத்துகளும் குறிப்பிட்ட சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால், கேமராக்களை பொருத்துவதன் மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளதால், தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது, இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ளது போல, விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் நவீன கேமராக்கள் பொறுத்தப்பட்ட வாகனம் சென்னையில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

போச்சு.., எல்லாம் முடிஞ்சிருச்சு.., ஜனனியின் திட்டத்தை அம்பலப்படுத்திய குணசேகரன்.., ஆதிரையின் திருமணம் நடக்குமா??

இந்த வாகனமானது, சுமார் 200 மீட்டர் தொலைவில் இருந்து வரும் விதி மீறல் வாகனங்களை கூட துல்லியமாக படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். இதன் அடிப்படையில் கட்டுப்பாட்டறையில் இருந்தவாறே போலீஸார் இந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்க நேரிடும். மேலும், குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் செயல்படுத்தப்பட உள்ள இந்த வாகனம், விரைவில் தமிழகம் முழுவதும் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், சாலை விபத்து மற்றும் விதிகளை மீறாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here