
எதிர்நீச்சல் சீரியலில் கதிர் தான் செய்தது தான் சரி என்று ஆணவத்தில் குணசேகரனிடம் ஜனனி, ரேணுகா பற்றி தப்பு தப்பா பேசுகிறார்கள். குணசேகரனும் கதிர் சொல்வது தான் சரி என்று நாங்க என்ன சொன்னாலும் நீங்க அடங்கி தான் போகணும் என நந்தினி, ரேணுகாவுக்கு ஆர்டர் போடுகிறார். அந்த நேரத்தில் கரிகாலனின் அம்மா ஆதிரையை கோவிலுக்கு அழைத்துச் செல்ல குணசேகரனிடம் பர்மிஷன் கேட்கிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் அடுத்த எபிசோடில் குணசேகரன் ஆதிரையை கரிகாலன் அம்மாவுடன் கோவிலுக்கு போக சொல்கிறார். ஆனால் அவர் நான் ஜனனி, சக்தி வந்தா தான் போவேன் என அடம் பிடிக்கிறார். இதற்கு முதலில் சம்மதிக்க மறுக்கும் குணசேகரன் பின் அவர்களுடன் கதிர், நந்தினியை அனுப்பி வைக்கிறார். ஆனால் கரிகாலன் அம்மா அழைத்துச் செல்லும் கோவிலில் தான் சக்தி-ஜனனி, அருணை மறைத்து வைத்துள்ளனர்.
வாகன ஓட்டிகளே., மெட்ரோ பணிகளுக்காக ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்., முக்கிய அறிவிப்பு!!!
இதனால் ஜனனி, குணசேகரன்-கதிரிடம் மாட்டிக் கொள்வோமோ என பயப்படுகிறார். மேலும் இதில் இருந்து தப்பிக்க சக்தியும் அவரும் பல திட்டங்களை யோசிக்கின்றனர். இப்படி இருக்கும் சூழலில் அடுத்து வரும் எபிசோடில் எப்படியும் கரிகாலனின் அம்மா அருணை கண்டுபிடித்து விடுவார் என்று தான் தெரிகிறது. அப்படி மட்டும் நடந்தால் குணசேகரன் ஜனனி போட்ட மொத்த திட்டத்தையும் உடைத்து ஆதிரை அருண் திருமணத்தை நிறுத்துவாரா என்று பார்க்கலாம்.