“தமிழ்நாட்டை கண்டு மகிழ்வோம்” – சுற்றுலாத்துறை தொடங்கிய புது திட்டம்!!

0

இன்று உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, “தமிழ்நாட்டை கண்டு மகிழ்வோம்” என்ற புதிய பெயரில் பத்து நபர்கள் 11 நாள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுலா பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

உலக சுற்றுலா தினம்:

உலகம் முழுவதும் சுற்றுலா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  இந்த தினத்தை சிறப்பு செய்யும் பொருட்டு, தமிழக சுற்றுலாத்துறை புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்ள இருக்கிறது. அதாவது, தமிழ்நாட்டை கண்டு மகிழ்வோம் என்ற ஒரு புதிய தலைப்பின் மூலம், 10 சமூக ஊடகவியலாளர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்க பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் 11 நாட்கள் பேருந்தின் வாயிலாக சாலை மூலம் தமிழகம் முழுவதும் சுற்றுலா மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழக சுற்றுலா துறையின் இந்த முன்னேற்பாடு மிக சிறந்த ஒரு விழிப்புணர்வு நிகழ்வு என்று பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here