தமிழக நகராட்சி துறையில் 1,933 காலிப்பணியிட அறிவிப்பு., இந்த தேதி முதல் விண்ணப்பிக்கலாம்?

0

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட இடங்களில் காலியாக உள்ள 1,933 உதவியாளர், இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு கல்வித்தகுதியை கொண்டவர்கள் பிப்ரவரி 9 முதல் மார்ச் 12ஆம் தேதி வரை www.tnmaws.ucanapply.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர். இவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் விவரங்களுக்கு 044-29864451 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தி உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

OTT இல் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘அயலான் ’.. எப்போது தெரியுமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here