இலங்கை வன்முறை எதிரொலி.. தமிழகத்தில் ஊடுருவும் தேச விரோதிகள்? மத்திய அரசு எச்சரிக்கை!

0
இலங்கை வன்முறை எதிரொலி.. தமிழகத்தில் ஊடுருவும் தேச விரோதிகள்? மத்திய அரசு எச்சரிக்கை!

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை எதிர்பார்க்காத அளவு அதிகரித்துள்ளது. இலங்கையில் இதற்கு எதிரான போராட்டங்களும் வன்முறைகளும் வலுத்து வருகிறது. இதனால் தமிழகத்தில் தேசவிரோத சக்திகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை போராட்டம்:

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்து. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். கொரோனா இயல்பு நிலைக்கு திரும்பிய இருந்தாலும் சில நாடுகளில் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

இந்த பொருளாதார நெருக்கடியால் தீவு நாடான இலங்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் கேஸ் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவு அதிகரித்துள்ளது. இதற்க்கெல்லாம் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே தான் கரணம் என மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே பதவி விலகி தலைமறைவாகி உள்ள நிலையில் தற்போது இலங்கையில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.

இனி சினிமாவில் தலைகாட்ட மாட்டேன்.. உதயநிதி ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு – காரணம் இதுதான்!

இந்நிலையில் தேச விரோதிகள் இலங்கையில் கடற்கரை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்த தமிழக காவல்துறை மற்றும் பாதுகாப்பு குழுமத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் போதைப்பொருள் கும்பல் கடற்கரை பகுதி வழியாக இந்தியாவிற்குள் நுழையவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து 58 கைதிகள் தப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here