தமிழகத்தில் மட்டும் தான் வடமாநிலத்தவர்க்கு உரிய பாதுகாப்பு., அமைச்சர் பரபரப்பு பேட்டி!!

0
தமிழகத்தில் மட்டும் தான் வடமாநிலத்தவர்க்கு உரிய பாதுகாப்பு., அமைச்சர் பரபரப்பு பேட்டி!!
தமிழகத்தில் மட்டும் தான் வடமாநிலத்தவர்க்கு உரிய பாதுகாப்பு., அமைச்சர் பரபரப்பு பேட்டி!!

தமிழ்நாட்டின் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. எனவே இதனை எதிர்த்து பல்வேறு இடங்களில் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு பகையான மாநிலம் தமிழ்நாடு என்பது போல் வலைத்தளங்களில் பரப்புரை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது சமூக ஊடகங்களில் வடமாநில தொழிலாளர்களை தமிழர்கள் துரத்தி அடிப்பது போல் போலி தகவல்கள் பரவி வருகிறது. இதை கண்டு பயந்து கொத்து கொத்தாக வடமாநில தொழிலாளர்கள் தங்களது இருப்பிடம் நோக்கி செல்வதாக தவறான பிம்பத்தை வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. இதனால் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கடும் அதிருப்தியை செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதம் Power Cut இருக்காது.., மின்வாரிய அதிகாரிகள் உறுதி!!`

அதாவது இவர்களில் பெரும்பாலானோர் மார்ச் 7ம் தேதி நடைபெற உள்ள ஹோலி பண்டிகையை சிறப்பிக்கவே சொந்த ஊருக்கு படையெடுத்துள்ளனர். இதையடுத்து இந்தியாவிலே வடமாநில தொழிலாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு தமிழ்நாட்டில் தான் வழங்கப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் சமூக ஊடகங்களில் தவறான பதிவுகளை பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here