கடைசில இப்படி மாட்டிக்கிட்டியே பங்கு.., இந்தியன் 2வில் அனிருத் செய்த தரமான சம்பவம்!!

0
கடைசில இப்படி மாட்டிக்கிட்டியே பங்கு.., இந்தியன் 2வில் அனிருத் செய்த தரமான சம்பவம்!!
கடைசில இப்படி மாட்டிக்கிட்டியே பங்கு.., இந்தியன் 2வில் அனிருத் செய்த தரமான சம்பவம்!!

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் குறித்து இணையத்தில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தியன் 2:

தமிழ் சினிமாவில் ஒரு கதாபாத்திற்காக உயிரையே பணயம் வைத்து நடிக்கும் முக்கிய நடிகர் தான் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஷங்கர் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதுபோக நடிகர் சித்தார்த், நடிகை காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர் மற்றும் மறைந்த விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆந்திராவில் நடக்கும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்தியன் 2 படத்தை குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் தான் இந்தியன். இப்படத்திற்கு AR ரகுமான் இசையமைத்திருந்தார். தற்போது 27 வருடங்களுக்கு உருவாகும் இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த பிரபல தொடரில் இனி இவங்க கிடையவே கிடையாது.., சீரியல்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!!

இருப்பினும் இந்தியன் பார்ட் 1ல் இந்தியன் தாத்தா கொலை செய்யும் போது AR ரஹ்மான் போட்ட மியூசிக் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தது. இதனால் ஷங்கர் அந்த மியூசிக் இந்தியன் 2வில் வேண்டும் என்று AR ரகுமானிடம் கேட்டுள்ளாராம். அதற்கு AR ரகுமான் ஓகே சொல்லிவிட்டாராம். எனவே இந்தியன் 2வில் தாத்தா வரும் போது அந்த மியூசிக் கண்டிப்பாக வரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here