எனது வாழ்க்கையில் இது மாதிரி நடந்ததே இல்லை – விஜய்சேதுபதி பட குழுவினர் மீது புகார் கொடுத்த இளையராஜா!!

0

நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் கடைசி விவசாயி என்ற படத்தின் குழுவினர் மீது இசைஞானி இளையராஜா இசையமைப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இளையராஜா புகார்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. மாஸ்டர் உள்ளிட்ட வெற்றி படங்களை அடுத்து,தற்போது நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது காக்கா முட்டை,ஆண்டவன் கட்டளை போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இசையமைக்க இசைஞானி இளையராஜா கமிட்டானார்.

மேலும்,இவர் இசையமைத்த இந்த படத்தின் பாடல் சர்வதேச விழாக்களுக்கு அனுப்பப்பட்டது. இதனை அடுத்து,இவருக்கும் இந்த படக்குழுவுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக இவரை இந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டு சந்தோஷ் நாராயணனை கமிட்டாகினர். இதனால் கோபமடைந்த இளையராஜா எனது வாழ்க்கையில் இது மாதிரியான ஒரு சம்பவம் நடந்ததே இல்லை என இசையமைப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here