Tuesday, May 28, 2024

facebook new update

பேஸ்புக்கின் புதிய பிரைவசி அப்டேட்கள் – புதிய வசதிகள் அறிமுகம்

பேஸ்புக், 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று உலகில் சுமார் 2.45 பில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ளது. இதில், 2014ல் ஃபேஸ்புக் பயனாளர்களுக்கான பிரைவஸி அமைப்புகள் (Privacy Checkup tool) அறிமுகப்படுத்தப்பட்டன. இதை இன்னும் மேம்படுத்திய வெர்ஷன் தற்போதுவெளியிடப்பட்டுள்ளது. என்னென்ன அப்டேட்கள்?? ஃபேஸ்புக்கில் புதிதாக நான்கு அம்சங்கள் இணைக்கப்பட்டு, பிரைவஸி அமைப்புகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அவைகள் முறையே,      1. "நீங்கள் பதிவிடுவதை யார் பார்க்க முடியும்?"(Who can see your post?) என்கிற விருப்பத்தேர்வின் மூலம், உங்கள் கணக்கில் இருக்கும் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் போன்ற சுய விவர தகவல்கள் மற்றும் கணக்கில் பதிவிடப்பட்டுள்ள பதிவுகளை யார் பார்க்க முடியும் என்பதைப் பயன்பட்டாளர்கள் இன்னும் தெளிவாகப் பார்க்கவும் மாற்றவும் முடியும்.      2. "உங்கள் கணக்கை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது?"("How to Keep Your Account Secure") என்ற அம்சத்தின்மூலம் வலுவான கடவுச்சொல் அமைக்கவும், புது சாதனங்களிருந்து உள்நுழையும்போது எச்சரிக்கை பெறவும் முடியும்.      3. "மக்கள், உங்களை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள்"("How People Can Find You") என்ற அம்சத்தின் மூலம், முகநூலில் மக்கள் உங்களை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள் என்றும், உங்களுக்கு யார் ரெக்வஸ்ட் அனுப்பமுடியும் என்பதையும் புதிய அப்டேட்டில் பயன்பாட்டாளர்களால் மாற்றியமைக்க முடியும்.      4. "ஃபேஸ்புக்கில் உள்ள தரவு அமைப்புகள் (Data Settings), ஃபேஸ்புக் இணைக்கப்பட்டுள்ள செயலிகளிலிருந்து பகிரப்படுகிற பதிவுகளை நிர்வகிக்க உதவுவதுடன், இணைக்கப்பட்டு பயன்படுத்தப்படாத செயலிகளை அகற்றவும் பயன்படும்" என ஃபேஸ்புக் கூறியுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

TNPSC பொது தமிழ் ஆறாம் வகுப்பு இலக்கிய கேள்விகள்

https://www.youtube.com/watch?v=4-LlWFlOUuk  Enewz Tamil இன்ஸ்டாகிராம் TNPSC குரூப் 4 தேர்வர்களே.., ஹால் டிக்கெட் ரிலீஸ்.., அதிகாரபூர்வ  அறிவிப்பு!!!
- Advertisement -spot_img