Saturday, April 27, 2024

donald trump attack

அமெரிக்காவின் 46 வது அதிபர் ஜோ பிடன் – தாக்குதலுக்கு மத்தியிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் முன்பு கூடி ஜோ பிடன் அதிபராக கூடாது என்று கோஷமிட்டு பேரணி நடத்தினர். இதற்கு மத்தியில் இன்று அமெரிக்காவின் 42 வது அதிபராக ஜோ பிடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல்: தற்போது அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சி அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றது. அவரது பதவிக்காலம் முடிவுக்கு வர இருந்ததால்...

மூன்றாம் உலகப்போர் அபாயம் – டுவிட்டரில் ட்ரெண்டிங்

அமெரிக்கா - ஈரான் ஆகிய நாடுகள் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில் ட்விட்டரில் மூன்றாம் உலகப்போர் குறித்த அபாயத்தையும், அதுதொடர்பான மீம்ஸ்களையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். அமெரிக்கா - ஈரான் தாக்குதல்: ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது கடந்த வாரம் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படையினர் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக அப்படையினர் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அதன் ஈராக்கின் பாக்தாத் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஹிஸ்புல்லா படையினர் சூறையாடினர். இந்த தாக்குதல்களுக்கான தண்டனையை ஈரான் எதிர்கொள்ளும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். அத்துடன் மத்திய-கிழக்கு பகுதியில் 750 வீரர்களை நிலைநிறுத்தவும் ட்ரம்ப் உத்தரவிட்டார். ஈரான் படைத்தளபதி கொலை: அமெரிக்க ராணுவம் ஆள் இல்லா விமானம் மூலம் இன்று அதிகாலை பாக்தாத் விமானநிலையம் அருகே நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் கீழ் இயங்கும் ஈரான் புரட்சிகர காவலர்கள் படையின் பிரிவான ஈரான் எலைட் குட்ஸ் படைத் தலைவர் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. டுவிட்டரில் ட்ரெண்டிங்: இந்நிலையில், ட்விட்டரில் World War 3 ஹேஷ்டேக் உலக ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.  இது உலக நாடுகளிடையே பதற்றத்தை உண்டாக்கி உள்ளது.
- Advertisement -spot_img

Latest News

மக்களே உஷார்.. தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் வெப்ப அலை வீசுவதாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு...
- Advertisement -spot_img