Friday, April 26, 2024

american army attack

உக்ரைன் விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் – ஈரான் அரசு ஒப்புதல்

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர்பதற்றம் நீண்ட நாட்களாக நிலவி வருகிறது. அமெரிக்கா படையினரால் ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதால், ஈரான் அமெரிக்கா ராணுவ மையங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் ஈரான் நாட்டின் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமையினி விமான நிலையத்திலிருந்து சுமார் 170 பயணிகளுடன் டேக்-ஆஃப் ஆன...

இந்தியாவிற்கு புதிய ரக தானியங்கி போர்விமானம் தயார்!! ஒரு ரீ டிவீட்க்கு 6 இலட்சம்!!

இந்தியாவிற்கு புதிய ரக தானியங்கி போர்விமானம் தயார்!! ஒரு ரீ டிவீட்க்கு 6 இலட்சம்!! https://youtu.be/UIHf7U8ROUE

அமெரிக்கா விமானத்திற்கு தடை |பளுதூக்கும் வீராங்கனைக்கு 4 வருட தடை | 5 news in 1 updates

அமெரிக்கா விமானத்திற்கு தடை |பளுதூக்கும் வீராங்கனைக்கு 4 வருட தடை | 5 news in 1 updates https://youtu.be/h66bItkzkrI

அமெரிக்க படை தளம் மீது ஈரான் தாக்குதல் – பழிக்குப் பழி

அமெரிக்க ராணுவம் ஆள் இல்லா விமானம் மூலம் பாக்தாத் விமானநிலையம் அருகே நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் கீழ் இயங்கும் ஈரான் புரட்சிகர காவலர்கள் படையின் பிரிவான ஈரான் எலைட் குட்ஸ் படைத் தலைவர் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க...

அமெரிக்கா ராணுவம் ஒரு தீவிரவாத இயக்கம் – ஈரான் அறிவிப்பு

அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. உலக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக இது பார்க்கப்படுகிறது.  நீண்ட நாட்களாக அமெரிக்காவிற்கும் ஈராக்கிற்கும் இடையில் போர் பதற்றம் நிகழ்ந்து வருகிறது.  முக்கிய காரணம்: அமெரிக்க ராணுவம் ஆள் இல்லா விமானம் மூலம் பாக்தாத் விமானநிலையம் அருகே நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் கீழ் இயங்கும் ஈரான் புரட்சிகர காவலர்கள் படையின் பிரிவான ஈரான் எலைட் குட்ஸ் படைத் தலைவர் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அறிவித்தது. ஈரான் பரபரப்பு அறிவிப்பு: இப்போது புதிய திருப்பமாக அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.  ஒரு நாட்டின் ராணுவத்தை, இன்னொரு நாடு தீவிரவாத அமைப்பு என்று அறிவிப்பது இதுதான் முதல்முறை. உலக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக இது பார்க்கப்படுகிறது.  இதற்காக ஈரான் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனை தீவிரவாத இயக்க தலைமையகமாக அறிவித்தது. அமெரிக்காவின் முப்படைகளும் தீவிரவாத இயக்கம்தான் என்று ஈரான் கூறியுள்ளது.  இந்த முப்படைகளை தீவிரவாத இயக்கம் என்று அறிவித்து இருப்பதால், அதன் தலைவர் அதிபர் டிரம்ப் தீவிரவாதி என்று பொருள்படுவார். இது அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

மூன்றாம் உலகப்போர் அபாயம் – டுவிட்டரில் ட்ரெண்டிங்

அமெரிக்கா - ஈரான் ஆகிய நாடுகள் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில் ட்விட்டரில் மூன்றாம் உலகப்போர் குறித்த அபாயத்தையும், அதுதொடர்பான மீம்ஸ்களையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். அமெரிக்கா - ஈரான் தாக்குதல்: ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது கடந்த வாரம் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படையினர் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக அப்படையினர் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அதன் ஈராக்கின் பாக்தாத் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஹிஸ்புல்லா படையினர் சூறையாடினர். இந்த தாக்குதல்களுக்கான தண்டனையை ஈரான் எதிர்கொள்ளும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். அத்துடன் மத்திய-கிழக்கு பகுதியில் 750 வீரர்களை நிலைநிறுத்தவும் ட்ரம்ப் உத்தரவிட்டார். ஈரான் படைத்தளபதி கொலை: அமெரிக்க ராணுவம் ஆள் இல்லா விமானம் மூலம் இன்று அதிகாலை பாக்தாத் விமானநிலையம் அருகே நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் கீழ் இயங்கும் ஈரான் புரட்சிகர காவலர்கள் படையின் பிரிவான ஈரான் எலைட் குட்ஸ் படைத் தலைவர் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. டுவிட்டரில் ட்ரெண்டிங்: இந்நிலையில், ட்விட்டரில் World War 3 ஹேஷ்டேக் உலக ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.  இது உலக நாடுகளிடையே பதற்றத்தை உண்டாக்கி உள்ளது.
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img