டக் அவுட்டில் ஹாட்ரிக் படைத்த சூர்யகுமார்…, ஆதரவு தரும் இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்!!

0

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டக் அவுட்டில் சாதனை படைத்த சூர்யகுமார் மீது, பல்வேறு விமர்சனங்கள் வரும் நிலையில், ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆதரவு அளித்து வருகின்றனர்.

சூர்யகுமார் யாதவ்:

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடியது. இந்த தொடரை, இந்திய அணியானது, 1-2 என்ற கணக்கில் போராடி ஆஸ்திரேலிய அணியிடம் இழந்தது. நடந்து முடிந்த இந்த தொடரில், இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டில் ஹாட்ரிக் சாதனையை படைத்துள்ளார். அதாவது, இந்திய அணியில் காயம் காரணமாக விலகி உள்ள ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்தை நிரப்புவதற்காக, சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கான பிளேயிங் லெவனில் இடம் பெற்றார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இவர், களமிறங்கி விளையாடிய 3 போட்டிகளிலும், 3 பந்துகள் மட்டுமே சந்தித்தார். அந்த 3 பந்திலும் போல்டாகி ஒரு ரன் கூட எடுக்காமல், டக் அவுட்டாகினார். இதன் மூலம், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டியிலும் முதல் பந்திலேயே டக் அவுட்டான, முதல் வீரரானார். மேலும், ஒருநாள் அரங்கில் தொடர்ச்சியாக 3 முறை டக் அவுட்டாகிய 6 வது இந்திய வீரரானார். இதற்கு முன், சச்சின், அனில் கும்ப்ளே, ஜாகிர் கான், பும்ரா ஆகியோர் இந்த வகையில் அவுட்டாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக ரேஷன் கடை பணி நியமனம்: இன்னும் சில காலங்கள் காத்திருக்க வேண்டிய அவலநில!!

இந்த மோசமான சாதனையால், சூர்யகுமார் யாதவ் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். இந்நிலையில், ரோஹித் மற்றும் ராகுல் டிராவிட், சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதாவது, டி20ஐ விட ஒருநாள் போட்டிகள் சற்று வித்தியாசமானது. இதன் சில நுணுக்கங்களை சூர்யகுமார் யாதவ் விரைவில் கற்றுக் கொள்வார் என இருவரும் தெரிவித்துள்ளனர். சூர்யகுமார் யாதவ் டி20 யின் நம்பர் 1. பேட்டர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here