உதயநிதி படத்துக்காக சூர்யாவை கைகழுவி விட்ட ஆரவ் – சுதாரித்து வாய்ப்பை தட்டி தூக்கிய வினய்!!

0
உதயநிதி படத்துக்காக சூர்யாவை கைகழுவி விட்ட ஆரவ் - சுதாரித்து வாய்ப்பை தட்டி தூக்கிய வினய்!!
உதயநிதி படத்துக்காக சூர்யாவை கைகழுவி விட்ட ஆரவ் - சுதாரித்து வாய்ப்பை தட்டி தூக்கிய வினய்!!

சூர்யா நடிப்பில் உருவாகி நாளை ரீலிசாவுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில், வில்லனாக நடிக்கும் வாய்ப்பை பிக் பாஸ் ஆரவ் தவற விட்டு விட்டதாக இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மிஸ் பண்ணிய ஆரவ்:

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி திரையரங்கத்தில் நாளை ரிலீஸாகவுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தில், பிரியங்கா மோகன், விஜய் டிவி புகழ், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் முதலில், வில்லனாக நடிக்க பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்விடம் பேசப்பட்ட தாகவும், அவர் மறுத்ததால் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் வினய்யை நடிக்க வைத்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.

ஆரவ் மறுத்ததற்காக காரணம் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இவர் நடிகர் உதயநிதி நடிப்பில் உருவாகவுள்ள, படத்தில் நடிப்பதற்காக தன் உடல் எடையை கூட்டியதால் இந்த படத்தில் நடிக்க அவர் மறுத்து விட்டதாக பேசப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் பரவி பலரால் பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here