கொரோனாவின் 3வது அலையை கட்டுப்படுத்த தயாராகுங்கள் – மத்திய, மாநில அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

0

நாட்டில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் அதன் மூன்றாவது அலை குறித்து விஞ்ஞானிகள் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டனர். தற்போது இதுகுறித்து உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கொரோனா 3வது அலை:

நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் வீரியம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாட்டில் கடந்த 15 நாட்களில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தற்போது நாளுக்கு நாள் தொற்றினால் பாதிக்கப்பட்டு சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தங்களது உயிரை இழந்து வருகின்றனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் வீரியத்தை குறைக்கும் வகையில் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நாட்டில் தகுதியுடையவர்கள் அனைவரும் தடுப்பூசியை வந்து செலுத்திக்கொள்ளுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாவது அலை மிக கடுமையாக இருக்கும் என்று திடுக்கிடும் தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டனர்.

மீண்டும் இந்தியாவில் கால் தடத்தை பதிக்கும் பப்ஜி – கொண்டாட்டத்தில் இளைஞர்கள்!!

இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இதுகுறித்து மத்திய மற்றும் மாநில அரசிற்கு உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாவது அலையை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தயாராக வேண்டும். அதற்கான அனைத்து விதமான தடுப்பு பணிகளையும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். கொரோனாவின் 3வது அலை குழந்தைகளை பெருமளவில் தாக்கும் என்று விஞ்ஞானிகள் கூறிய நிலையில் அதிகாரிகள் விரைந்து செயல்பட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here