மீண்டும் பார்முக்கு திரும்பிய ஸ்டீவ் ஸ்மித்…, 14,000 ரன்களை கடந்து அசத்தல்…, சச்சினை முந்துவாரா??

0
மீண்டும் பார்முக்கு திரும்பிய ஸ்டீவ் ஸ்மித்..., 14,000 ரன்களை கடந்து அசத்தல்..., சச்சினை முந்துவாரா??
மீண்டும் பார்முக்கு திரும்பிய ஸ்டீவ் ஸ்மித்..., 14,000 ரன்களை கடந்து அசத்தல்..., சச்சினை முந்துவாரா??

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 94 ரன்கள் அடித்து, சர்வதேச அளவில் 14000 கடந்து சாதனை படைத்துள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித்:

டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு, சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து அணியானது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 2வது போட்டியில், சில நாட்களாக பார்ம் இன்றி தவித்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 5 பவுண்டரி ஒரு சிக்ஸர் உட்பட 94 ரன்கள் அடித்து அதிரடி காட்டினார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த போட்டியில், இவர் 29 ரன்களை அடித்த போது, சர்வதேச அளவில் 14000 ரன்களை கடந்த 9வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இவர், சர்வதேச அளவில் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8161 ரன்களும், 63 டி20 போட்டிகளில் 1008 ரன்களையும் அடித்துள்ளார். மேலும், 138 ஒருநாள் போட்டிகளில், 4896 ரன்களை அடித்து ஒட்டுமொத்தமாக 14065 ரன்களை எட்டி உள்ளார்.

மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூர்: நெதர்லாந்து வீரரை வீழ்த்திய அர்ஜுன் எரிகைசி…, போட்டியை சமன் செய்த பிரக்ஞானந்தா!!

இதற்கு முன், ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வா, ஆலன் பார்டர், மைக்கேல் கிளார்க், டேவிட் வார்னர் உள்ளிட்டோர் இந்த சாதனையை படைத்த முதல் ஐந்து ஆஸ்திரேலியா வீரர்கள் ஆவார். இந்த அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சர்வதேச அளவில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் தான் 34,357 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here