மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூர்: நெதர்லாந்து வீரரை வீழ்த்திய அர்ஜுன் எரிகைசி…, போட்டியை சமன் செய்த பிரக்ஞானந்தா!!

0
மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூர்: நெதர்லாந்து வீரரை வீழ்த்திய அர்ஜுன் எரிகைசி..., போட்டியை சமன் செய்த பிரக்ஞானந்தா!!
மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூர்: நெதர்லாந்து வீரரை வீழ்த்திய அர்ஜுன் எரிகைசி..., போட்டியை சமன் செய்த பிரக்ஞானந்தா!!

மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூரின் 5 வது சுற்றில், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி நெதர்லாந்த் வீரரை வீழ்த்தி தனது 2 வது வெற்றியை பதிவு செய்து முன்னேறி உள்ளார்.

மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூர்:

மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூரின் பல தொடர்களின் முடிவில், எட்டு வீரர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இந்த எட்டு வீரர்களில், இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி மற்றும் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் உள்ளிட்ட வீரர்களும் இடம் பிடித்துள்ளனர். கடந்த 14ம் தேதி முதல் டாப் 8 வீரர்களுக்கிடையே இறுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில், ஐந்தாவது சுற்றில், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, நெதர்லாந்தின் GM அனிஷ் கிரியை எதிர்கொண்டார். இந்த போட்டியில், 2.5 – 1.5 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில், நெதர்லாந்து வீரரை வீழ்த்தி, தனது 2 வது வெற்றியை பதிவு செய்தார் அர்ஜுன் எரிகைசி. இதே போல, போலந்தின் ஜான்-கிரிஸ்டோஃப் டுடாவை இந்தியாவின் பிரக்ஞானந்தா எதிர்த்துப் போட்டியிட்டார்.

T20 போட்டிகளில் ரிஷப் பந்த் இந்த இடத்திற்கு தான் சரிப்பட்டு வருவார்…, தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்!!

இந்த போட்டியானது, வெற்றி தோல்வியின்றி 3.5-3.5 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதன் மூலம், பிரக்ஞானந்தா மற்றும் அர்ஜுன் எரிகைசி தலா 6 புள்ளிகளை பெற்று டாப் 8 பட்டியலில் 5வது மற்றும் 6 வது இடத்தை பிடித்துள்ளனர். இதில், கார்ல்சன் 15, துடா 9 புள்ளிகளுடன் முதலிரு இடங்களை பிடித்துள்ளனர். இந்த தொடரில், நாளை கார்ல்சனுக்கு எதிராக பிரக்ஞானந்தா மோத உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here