பெண் காவலர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகள்.., முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!!

0
பெண் காவலர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகள்.., முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!!
பெண் காவலர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகள்.., முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் உள்ள பெண் காவல் துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அசர வைக்க கூடிய சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின்

தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் தற்போது ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். இவ்வாறு தங்களது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் பெண்களை மத்திய, மாநில அரசு பட்டங்கள், விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண் காவலர்களும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

  • இனி வரும் நாட்களில் தமிழக அரசுக்காக உழைக்கும் பெண் காவலர்களுக்கு கலைஞர் பெயரில் விருதுகள் வழங்கப்படும்.
  • தினமும் அதிகாலை ரோல் கால் செல்லும் பெண்கள் இனி 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு ரோல் கால் செல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.
  • அனைத்து மாவட்டங்களிலும் காவலர்கள் தங்கும் விடுதி உள்ள நிலையில் சென்னை மதுரையில் பெண் காவலர்கள் தங்கும் விடுதி இல்லை. இதனால் கூடிய விரைவில் இந்த இரு மாவட்டங்களிலும் விடுதி அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
  • பெண் காவலர்களுக்கு தனியாக துப்பாக்கி சுடும் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கு பரிசுகளும் விருதுகளும் வழங்கப்படும்.
  • அனைத்து மாவட்டங்களில் உள்ள காவல்துறை நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கு என்று தனி ஓய்வறை அமைத்துக் கொடுக்கப்படும்.
  • பெண் காவலர்கள் தங்களது குடும்ப சூழலுக்கு ஏற்ப விடுப்புகளும், பிற மாவட்டங்களுக்கும் பணியிடம் மாற்றுதலும் செய்து கொடுக்கப்படும்.
  • மேலும் டிஜிபி அலுவலகத்தில் பெண் காவலர்களுக்கு என்று பணி வழிகாட்டும் ஆலோசனைக் கூட்டம் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • பெண் காவலர்களின் குழந்தைகளுக்கென்று காப்பகங்கள் அமைக்கப்பட்டு அவர்கள் வழிநடத்தப்படுவார்கள்.
  • பெண் காவல் அதிகரிகளுக்காக ஆண்டுதோறும் தேசிய மாநாடு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here