கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு பழைய பார்மோட திரும்பி வாப்பா…, ரிஷப் பந்த் குறித்து இந்திய வீரர் அட்வைஸ்!!

0
கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு பழைய பார்மோட திரும்பி வாப்பா..., ரிஷப் பந்த் குறித்து இந்திய வீரர் அட்வைஸ்!!
கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு பழைய பார்மோட திரும்பி வாப்பா..., ரிஷப் பந்த் குறித்து இந்திய வீரர் அட்வைஸ்!!

சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வரும் ரிஷப் பந்துக்கு, ஆதரவாக சில கருத்துக்களை இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

ரிஷப் பந்த்:

டி20 போட்டிகளில் தொடர்ந்து சொதப்பிய ரிஷப் பந்த் தற்போது ஒருநாள் தொடரிலும் தடுமாற்றம் அடைந்து வருகிறார். சமீபத்தில் தான், ரிஷப் பந்த் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் தான் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என தினேஷ் கார்த்திக் கூறியிருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின், முதல் போட்டியில் 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதற்கு முன் டி20 தொடரிலிலும் 6, 11 என சொற்ப ரன்களிலேயே வெளியேறி இருந்தார். இதனால், இவரது பார்ம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், ரிஷப் பந்த்க்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது, சர்வதேச அளவிலான போட்டிகளில் இருந்து சிறிது ஓய்வு ரிஷப்புக்கு கொடுக்கலாம். இவர், அந்த சிறிய இடைவெளியில், தன்னுடைய பழைய பார்மை மீட்டெடுக்க முயற்சிக்கலாம் என கூறியுள்ளார். மேலும், அடுத்தடுத்து உலக கோப்பை தொடர்கள் வர இருப்பதால், ரிஷப் தனது எனர்ஜிய அதிகரித்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here