மழைக்கால மருத்துவ முகாம்.., சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 300 முகாம்கள்.., அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிவிப்பு!!

0
மழைக்கால மருத்துவ முகாம்..
மிக் ஜாம் புயல் சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களை புரட்டி போட்டது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவ தொடங்கியுள்ளது. சொல்லப்போனால் ஒரு நாளைக்கு 4 பேருக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருவதாக மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த நோயில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது அமைச்சர் மா. சுப்ரமணியன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 300 மழைக்கால மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த முகாம்கள் இன்று முதல் டிசம்பர் 10ம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது என்று அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here