அரசு பள்ளியில் காத்திருக்கும் 8 லட்ச ஆசிரியர் பணியிடங்கள்…, நிரப்புவது குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
அரசு பள்ளியில் காத்திருக்கும் 8 லட்ச ஆசிரியர் பணியிடங்கள்
ஒவ்வொரு மாநில அரசும் தேர்வு வாரியத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி, அதன் மூலம் திறமையான ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் பணி அமர்த்தி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மாநில அரசும் இந்த செயல் முறையை தான் பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், கல்வி அமைச்சகமானது இந்தியாவில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்கள் குறித்த தரவை வெளியிட்டுள்ளது.

அதாவது, தொடக்கப்பள்ளியில் 7.2 லட்சமும், மேல்நிலைப்பள்ளி 1.4 என 8.4 லட்சம் ஆசிரியர்கள் பணிகள் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் உள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அதிக காலி பணியிடங்கள் உள்ள முதல் 5 மாநிலங்களையும் வெளியிட்டுள்ளது.

  •  பீகார் – 1,92,097
  • உத்தரபிரதேசம் – 1,43,564
  • ஜார்கண்ட் – 75,726
  • மேற்கு வங்காளம் – 53,137
  • மத்திய பிரதேசம் – 52,394

விரைவில், காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

சென்னை மக்களுக்கு உதவ நினைத்த அறந்தாங்கி நிஷாவுக்கு ஏற்பட்ட அவல நிலை.., கண்கலங்கி எமோஷனலான தருணம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here