ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாஸ் காட்டிய தமிழ்நாடு – இந்திய அளவில் முன்னிலை!!

0

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்திய அளவில் தமிழ்நாடு முன்னிலை பெற்றுள்ளது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் டெல்லியும் அடுத்து சென்னையும் உள்ளன.

மத்திய அரசு நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றது. அதில் ஒரு திட்டம் தான் ஸ்மார்ட் சிட்டி. ஸ்மார்ட் நகரங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியான போது பல்வேறு வினாக்கள் எழுப்பபட்டாலும், தற்போது அந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

தற்போது அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற நிறுவனம் இந்த ஸ்மார்ட் சிட்டி செயல்பாடு பற்றிய ஆய்வை நடத்தி உள்ளது. ஆய்வின் முடிவில் இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ள 100 நகரங்களில் சென்னையும், கோவையும் இடம்பெற்றுள்ளன.

அதாவது ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை செயல்படுத்துவதில் முதல் இடத்தில் டெல்லியும் இரண்டாம் இடத்தில் சென்னையும் உள்ளது. இந்தூர், சூரத் நகரங்களுக்கு அடுத்ததாக தமிழகத்தின் கோவை மாவட்டம் சிறப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here