மீண்டும் இணைந்த பிக் பாஸ் பிரபலங்கள்.. இன்னும் பழைய பாசத்த மறக்கல போலயே!!

0

சின்ன திரை ரசிகர்களுக்கு தீனி போடும் ஷோகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முக்கிய இடமுண்டு. இந்த ஷோ தமிழ் நாட்டில் முதல் முறையாக 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் பிக் பாஸ் வீட்டினுள் நடக்கும் சண்டை சச்சரவுகளால் இந்நிகழ்ச்சிக்கு மவுசு கூடியது.

முதல் சீசனின் வெற்றி காரணமாக அடுத்தடுத்து சீசன்கள் ஒளிபரப்பப்பட்டது. தற்போது 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதில் TRP யை உச்சத்திற்கு கொண்டு சென்ற சீசன் என்றால் அது முதல் மற்றும் மூன்றாவது சீசன் தான். அந்த சீசன்களில் ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள் இன்றும் மக்களிடம் பேசப்படும் டாப்பிக் ஆக உள்ளது.

 

பிக் பாஸ் மூன்றாம் சீசனில் கலந்து கொண்டவர்களில் முக்கியமான இருவர், தர்ஷன் மற்றும் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் லாஸ்லியாவும் தர்ஷனும் சேர்ந்து கூகிள் குட்டப்பா என்ற ஒரு படத்தில் நடித்துள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் நீண்ட நாட்களுக்கு பின்னர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here