
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து காரை இழந்து தவிக்கிறார். மேலும் இந்த விஷயத்தை வீட்டில் எப்படி சொல்வது என்று தெரியாமல் குடித்துவிட்டு போதை தலைக்கு ஏற வீட்டுக்கு வருகிறார். மேலும் குடிபோதையில் மீனாவிடம் நீ தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என சத்தம் போடுகிறார். இப்படி இருக்கையில் சீரியலில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது முத்து மீனாவிடம் என்னோட எல்லா பிரச்சனைக்கும் நீ மட்டும் தான் காரணம். உன்னால் என் வாழ்க்கை நாசமா போச்சு என்பாராம். இதை கேட்ட ரோகிணி இதுதான் சாக்கு என்று மீனாவை சத்தம் போடுவாராம். உடனே முத்து ஆத்திரம் அடைந்து அவ என் பொண்டாட்டி. அவள திட்ட அடிக்க எனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு. நீ என் பொண்டாட்டிய பேசுறதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு என ரோகிணி அசிங்கப்படுத்துவாராம்.