உலக கோப்பை 2023 தொடர் கடந்த அக்டோபர் 5ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி ஆட்டம், மும்பை வான்கடே மைதானத்தில் நாளை (நவம்பர் 15) பகல் 2.00 மணிக்கு நடக்கிறது. இதில், வெற்றி பெறுவோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால், ஆட்டத்தில் அனல் பறக்க உள்ளது. இந்நிலையில், இந்த மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் என்று பிட்ச் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் வானிலையில் பெரிய மாற்றம் இல்லாததால் மழை வரவும் வாய்ப்பில்லை. காற்றின் வேகம் தான் சற்று அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் போது, பிட்ச் முதலில் பவுலிங் செய்வோருக்கு தான் உதவும் என தெரிகிறது. இரவில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் சேசிங் செய்யும் அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். இவை அனைத்தையும் சிறப்பாக கையாளும் அணி தான் போட்டியிலும் வெற்றி பெறும்.
TNPSC தேர்வர்களே., “குரூப் 1” தேர்வு அப்டேட்., மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க!!!