
பாக்கியலட்சுமி சீரியல் இப்போது அதிரடியான பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஜெனி வீட்டை விட்டு வெளியேறியதால் அவரை எப்படியாவது சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வர வேண்டும் என ஈஸ்வரி நினைக்கிறார். ஆனால் பாக்கியா நிச்சயம் நான் ஜெனியை என் பையனோடு சேர்ந்து வாழ சொல்ல மாட்டேன். ஜெனி என்ன முடிவு எடுத்தாலும் நான் அவளுக்கு சப்போர்ட்டா தான் இருப்பேன் என்கிறார். இந்நிலையில் இந்த சீரியலின் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது பாக்கியா செழியன் வாழ்க்கைக்கு எதிராக நிற்பது ஈஸ்வரிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் தினம் தினம் அவரை வாய்க்கு வந்தபடி பேசுவாராம். மேலும் நீ வேலை பார்த்து கடனை மட்டும் தான் சம்பாதிச்சு வச்சிருக்க என்று திட்டுகிறார். இதை கேட்ட ராதிகா நம்மனால தான் பாக்கியாவுக்கு இந்த நிலைமை என வருத்தப்படுவாராம்.உடனே பாக்கியாவிடம் நீங்கள் இனி எப்பவும் போல் கேண்டினை நடத்தலாம் என்று சொல்வாராம். இதை கேட்டு எல்லோரும் ஆச்சரியப்படுவார்களாம்.
இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.., வெளியான பகீர் அறிவிப்பு!!!