ஒரு நாள் கூட தனியா படுக்க முடியாதா? மீனாவை கொச்சையாக பேசும் விஜயா., சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!

0
ஒரு நாள் கூட தனியா படுக்க முடியாதா? மீனாவை கொச்சையாக பேசும் விஜயா., சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!
சிறகடிக்க ஆசை சீரியலில் ரவி-ஸ்ருதி வீட்டுக்கு வந்ததால் அவர்களை விஜயா முத்து-மீனா ரூமில் தங்க வைக்கிறார். இதனால் வேறு வழியின்றி மீனா முத்து இருவரும் மொட்டை மாடியில் தூங்குகின்றனர். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் முத்து மீனாவிடம் உனக்கு தேவையான எல்லாத்தையும் இந்த ரூமில் எடுத்துக்கோ என்கிறார். மீனா எதுக்கு என்று கேட்க முதலில் நான் சொல்வதை மட்டும் செய் என முத்து சத்தம் போடுகிறார். பின் மீனா தனக்குத் தேவையானதை எடுத்துவிட்டு வெளியே வர முத்து கதவை பூட்டி சாவியை வைத்துக் கொள்கிறார்.
அந்த நேரத்தில் விஜயா முத்துவிடம் எதுக்கு கதவ பூட்டுற என்று கேட்கிறார். உடனே முத்து நா எதுக்கு என்னோட ரூம விட்டுட்டு மொட்டை மாடியில் போய் படுக்கணும். எனக்கென்ன தலையெழுத்தா என சத்தம் போடுகிறார். மேலும் இவன் செஞ்ச வேலைக்கு ரோட்டுலதான் படுக்கணும் என்னால ரூம கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜயா மீனாவிடம் என்ன வேல பார்த்துட்டு போறான் உன்னோட புருஷன். ஒரு நாள் கூட நீ இல்லாம அவனால தனியா தூங்க முடியாதா?? உனக்கும் அவன் இல்லாம தனியா படுக்க முடியாதா?? என அசிங்கமாக பேசுகிறார். விஜயாவின் அசிங்கமான வார்த்தையால் மீனா சுக்கு நூறாக உடைந்து போகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here