மீண்டும் தலைதூக்கும் சுப்மன் கில், சாரா டெண்டுல்கர் தொடர்பு…, வைரலாகும் பதிவு உள்ளே!! 

0
மீண்டும் தலைதூக்கும் சுப்மன் கில், சாரா டெண்டுல்கர் தொடர்பு..., வைரலாகும் பதிவு உள்ளே!! 
கிரிக்கெட் வீரர்கள் பெரும்பாலானோர், சினிமாத் துறையில் பிரபலமானவர்கள் மற்றும் பிரபலங்களை தங்களது வாழ்க்கை துணையாக்கி  கொள்வது தற்போது சாதாரணமாக ஒன்றாகவே மாறிவிட்டது. மேலும், இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிரபலங்களை காதல் செய்து வருவதாக பல வதந்திகளும் வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், இந்திய நட்சத்திர வீரர் சுப்மன் கில்லுக்கும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகள் சாராக்கும் தொடர்பு இருப்பதாக முன்பு பல்வகையான வதந்திகள் பரவி வந்தன.
இந்நிலையில், இவர்கள் இருவர் தொடர்பான தகவல் ஒன்று மீண்டும் பரவி வருகிறது. அதாவது, காதலர் தினமான நேற்று (பிப்ரவரி 14) சாரா டெண்டுல்கர் சிவப்பு நிற ஆடை அணிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பலரும் சுப்மன் குறித்த கமெண்ட் செய்து வருகின்றன. மேலும், சாரா டெண்டுல்கர் தனது இன்ஸ்டா ஸ்டோரியாக எனக்குக் கிடைத்துள்ள சிறப்புப் பரிசு இது உண்மையில் காதலர் தின வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு ஒரு பேக்கரி சீஸ் கேக்கை தனக்கு  அனுப்பியிருந்ததை வீடியோவாக பதிவிட்டு இருந்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here