காதலனுடன்  ஸ்ருதிஹாசன் ரகசிய திருமணம்?? அவரே கொடுத்த வெளிப்படை விளக்கம்!!

0
காதலனுடன்  ஸ்ருதிஹாசன் ரகசிய திருமணம்?? அவரே கொடுத்த வெளிப்படை விளக்கம்!!
தென்னிந்திய திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்த இவர் பின்னணி பாடகியாகவும் ஹீரோயினாகவும் திரையுலகை கலக்கி வருகிறார். மேலும் தற்போது இவர் தெலுங்கு படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
இப்படி இருக்கையில் பாலிவுட் பிரபலம் ஓர்கான் என்பவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்ருதிஹாசனின் கணவர் சாந்தனு எனக்கு நெருங்கிய நண்பர் என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஸ்ருதிஹாசன்  தனது காதலரை ரகசியமாக திருமணம் செய்து  கொண்டார் என்ற வதந்தியை பரப்பத் தொடங்கினர்.  இதையடுத்து ஸ்ருதிஹாசன் தனது ரகசிய திருமணம் பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது சாந்தனுவை நான் ரகசிய திருமணம் செய்து கொள்ளவில்லை, எங்களுக்குள் இருக்கும் உறவை இதுவரை மறைக்க வில்லை. அப்படி இருக்கையில் எதற்காக என் திருமணத்தை  மட்டும் நான் மறைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here