ITTF தடகள ஆணையத்தில் முதல் இந்தியர்…, கேல் ரத்னா நாயகனுக்கு கிடைத்த ஜாக்பாட்!!

0
ITTF தடகள ஆணையத்தில் முதல் இந்தியர்..., கேல் ரத்னா நாயகனுக்கு கிடைத்த ஜாக்பாட்!!
ITTF தடகள ஆணையத்தில் முதல் இந்தியர்..., கேல் ரத்னா நாயகனுக்கு கிடைத்த ஜாக்பாட்!!

ITTF தடகள ஆணையத்தின் உறுப்பினராக, கேல் ரத்னா விருது பெற இருக்கும் அச்சந்தா சரத் கமல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அச்சந்தா சரத் கமல்:

இந்தியாவின் டேபிள் டென்னிஸ் நட்சத்திர வீரரான அச்சந்தா சரத் கமல் விளையாட்டு துறையின் உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், இவரை பற்றி அறியாத ஒன்று உள்ளது. அதாவது, சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு (ITTF) தடகள ஆணையத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த ஆணையத்தில், உறுப்பினர் ஆவதற்கு, சமீபத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், ருமேனியாவின் எலிசபெட்டா சமாரா 212 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். இவருக்கு அடுத்ததாக, இந்தியாவின் அச்சந்தா சரத் கமல் 187 வாக்குகளுடன் 2 வது இடத்தை பெற்றார். இதன் மூலம், 2022 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை ITTF தடகள ஆணையத்தின் உறுப்பினராக பணியாற்றுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விஜய்சேதுபதியின் “DSP” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!!

இவரை போல, ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து எட்டு வீரர்கள் ITTF தடகளத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பேசிய அச்சந்தா ஷரத் கமல், என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here