விஜய்சேதுபதியின் “DSP” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!!

0
விஜய்சேதுபதியின்
விஜய்சேதுபதியின் "DSP" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!!

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் “DSP” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஹீரோவாக இன்ட்ரோ கொடுத்து தற்போது வில்லன் அவதாரத்தில் கலக்கி வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கான மும்பைக்கர் மற்றும் கத்தீரனாவுடன் இணைந்து மேரி கிறிஸ்துமஸ் என்னும் படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஹிட் படத்தை கொடுத்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் தான் DSP. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

ரோஜா சீரியல் நடிகைக்கு நடந்த சோகம்.,, ஃபீல் பண்ணும் ரசிகர்கள்.,வைரலாகும் வீடியோ!!

தற்போது இப்படத்தை குறித்து ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது D. இமான் இசையமைக்கும் இப்படத்தில் இடம்பெற்ற ” நல்லா இருமா” என்ற முதல் சிங்கிள் சாங் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பரவி வருகிறது. மேலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த டிசம்பர் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here