பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அறிவிப்பு!!

0

தமிழகத்தில் உள்ள பதினொன்றாம் வகுப்புக்கு பெரும்பாலான தனியார் பள்ளிகள் உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை. மேலும் கடமைக்கு பாடங்களை நடத்தி முடித்து மாணவர்களை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு முன்னதாகவே தயார் செய்வதில் தீவிரம் கட்டி வருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கான ஹாப்பி நியூஸ் - மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை!

ஆனால், உயர்கல்வி படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளில் பிளஸ் 1 பாடங்களில் இருந்தே அதிக கேள்விகள் கேட்கப்படுவதால், மாணவர்கள் பதில் தெரியாமல் குறைந்த மதிப்பெண்களை எடுக்கின்றனர். இந்நிலையில் அண்மையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, அதில் பல தகவல்களை தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் தெரிவித்து உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது அவர் கூறியதாவது, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 என தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொது தேர்வு எழுதுவதால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகவும் போதுமான கால அவகாசம் கிடைப்பதில்லை.

இவற்றைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. இது தொடர்பான பரிந்துரை அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முதல்வரின் அனுமதி கிடைத்தபின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here