சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்த நடிகை நயன்தாரா – அதுவும் இதுதான் காரணமாம்!!

0

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. பிரபல இயக்குனர் ஹரி இயக்கிய ஐயா படத்தின் மூலம் கதாநாயகியாக நயன்தாரா அறிமுகமாகினார். மேலும் முதல் படத்திலே மக்களின் வரவேற்பை பெற்று தற்போது வரை முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.

அவர் மக்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை பல வருடமாக காதலித்து கடந்த மாதம் ஜூன் 9ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் அவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்து வெளியான படத்தில் உள்ள ஒரு ஐட்டம் பாடலுக்கு நயன்தாராவை கேட்டபோது நடிக்க முடியாது என்று கூறியுள்ளார். அதாவது, இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் என்கிற இந்தி படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது.

இப்படத்தில் இடம்பெற்ற ஒன் டூ த்ரீ ஃபோர் என்ற பாடல் ப்ரியாமணி நடித்து பட்டிதொட்டி எல்லா இடத்திற்கும் பரவி பேமஸ் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலுக்கு முதலில் நயன்தாராவை அழைத்துள்ளனர், அப்போது அவருக்கு கால்சீட் இல்லாத காரணத்தினால் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் பாலிவுட் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் அட்லி இயக்கத்தில் நயன்தாரா சேர்ந்து நடிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here