இந்த கல்வியாண்டில் 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்தா?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

0
Minister-Sengottaiyan-Press-Meet_
Minister-Sengottaiyan-Press-Meet

தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக எந்த ஒரு முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறி உள்ளார்.

பொதுத்தேர்வுகள் ரத்தா??

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் தேர்வுகள் நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகிறது. பள்ளிகளை பொங்கல் முடிந்து திறக்குமாறு ஆசிரியர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கிடையில் இன்று ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் சில தகவல்களை வெளியிட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

minister sengottaiyan
minister sengottaiyan

அதில் இந்த கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு அரசு சார்பில் நீட் தேர்வு பயிற்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறப்பதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலனை கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்படும். இது குறித்து அனைத்து ஆசிரியர்களின் கருத்துகளை கேட்ட பின்பே முடிவு செய்யப்படும்.

மேலும் பேசிய அமைச்சர், நாட்டிலேயே அரசுப்பள்ளி மாணவர்கள் 303 பேருக்கு மருத்துவர் ஆகும் வாய்ப்பை தமிழக அரசு வழங்கி உள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here