பொதுத்தேர்வு மாணவர்களே., மே 22ம் தேதி முதல் உதவித்தொகைக்கான விண்ணப்பம்., உடனே அப்ளை பண்ணுங்க!!!

0
பொதுத்தேர்வு மாணவர்களே., மே 22ம் தேதி முதல் உதவித்தொகைக்கான விண்ணப்பம்., உடனே அப்ளை பண்ணுங்க!!!
பொதுத்தேர்வு மாணவர்களே., மே 22ம் தேதி முதல் உதவித்தொகைக்கான விண்ணப்பம்., உடனே அப்ளை பண்ணுங்க!!!

தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வி படிப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கான உதவித்தொகையை VIT பல்கலைக்கழக வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமையில் உயர் கல்வி அறக்கட்டளை 2012ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தற்போது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதால், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் தேர்ச்சி பெற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்புக்கான உதவித்தொகை விண்ணப்பங்களை வழங்க உள்ளனர். காட்பாடி விஐடி பல்கலைக்கழக வளாகம், ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளி, அரக்கோணம் ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மே 22 முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளது.

மீண்டும் புழக்கத்திற்கு வரும் ரூ.1000நோட்டுகள்?? RBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

இங்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நகலை கொண்டு சென்று விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவர்களின் கையொப்பங்களை பெற வேண்டும். இதனை திட்ட ஒருங்கிணைப்பாளர், அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை, அறை எண்- 215, டாக்டர் MGR பிளாக், விஐடி வளாகம், வேலூர் – 632014 என்ற முகவரிக்கு நேரடியாகவோ, தபால் மூலமாகவோ ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0416-2202196, 84284 08872 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here