நாடு முழுவதும் திடீரென முடக்கப்பட்ட வங்கி கணக்குகள் – பொதுத்துறை பேங்க் நிர்வாகம் அதிரடி விளக்கம்!!

0
நாடு முழுவதும் திடீரென முடக்கப்பட்ட வங்கி கணக்குகள் - பொதுத்துறை பேங்க் நிர்வாகம் அதிரடி விளக்கம்!!

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கியான SBI வங்கியில் கணக்கு வைத்திருந்த பெரும்பாலான பயனர்கள் தங்களின் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளனர்.

கணக்குகள் முடக்கம் :

நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களின் பண பரிமாற்ற சேவைகளுக்காக தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். பயனர்கள் தங்கள்  வங்கி கணக்குகளை சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் நிர்வாகத்தின் அறிவுரையுடன் முறையாக பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில், நம் நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியான SBI வங்கி, ஒரு சில வாடிக்கையாளர்களின் கணக்குகளை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி  முடக்கியுள்ளதாக வாடிக்கையாளர்கள் சமூக வலைத்தளங்களில் புகார் பதிவிட்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ள வங்கி நிர்வாகம், ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின் படி,  பயனர்கள் தங்கள் வங்கி கணக்குடன் KYC எனப்படும் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளும் விவரங்களை இணைக்காமல் இருந்ததால், அவர்களின் கணக்குகளை முடக்கியுள்ளதாகவும், அதனை தவிர்க்க அவர்கள் அருகில் உள்ள வங்கி கிளைக்கு சென்று தங்கள் KYC விவரங்களை அளித்து, அதை சரி செய்து கொள்ளலாம் என தெளிவுபடுத்தியுள்ளது. பெரும்பாலான SBI பயனர்களின் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டிருப்பது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here