தமிழ் சினிமாவில் எண்ணற்ற ரசிகர்களை தன் வசம் வைத்து கோலிவுட்டையே மிரள வைப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அனைத்து படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து, தற்போது வசூல் மன்னனாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடித்த லியோ திரைப்படம் 600 கோடி வசூலித்து வசூல் சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் இணைந்து தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரை குறித்து நடிகை சமந்தா சில வார்த்தைகள் பேசியுள்ளார். அதாவது நடிகர் விஜய்க்கு இருக்கும் ஃபிட்னஸுக்கு அவர் ஒரு சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் நடித்தால் சூப்பராக இருக்கும். மேலும் அந்த கதையில் நான் சூப்பர் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
UPI பயனாளர்களே., இனி ரூ.5 லட்சம் வரை பணம் அனுப்பலாம்? வங்கி & மொபைல் எண் தேவையில்லை!!!