சாகித்ய அகாடமி விருது 2020 அறிவிக்கப்பட்டது – எழுத்தாளர் ஜெயஸ்ரீ பெறுகிறார்..!

0

ஆண்டுதோறும் வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருதில் இந்த வருடம் தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பிரிவில் எழுத்தாளர் ஜெயஸ்ரீ-க்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

எந்த நூலிற்குத் தெரியுமா..?

வருடந்தோறும் 24 இந்திய மொழிகளில் வெளியாகும் நூல்களில் இருந்து விருதுக்காக எழுத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த வகையில் ஜெயஸ்ரீ மலையாளத்தில் மனோஜ் குரூரின், ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற நாவலை தமிழ் மொழியில் மொழிபெயர்த்ததற்கு இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. வம்சி பதிப்பகம் வெளியிட்ட இந்த நூலினை சிறப்பான முறையில் ஜெயஸ்ரீ மொழிபெயர்த்து இருந்தார்.

சாகித்ய அகாடமி விருது பெறுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், கேடயமும் வழங்கப்படும். சங்க காலப் பாணர், கூத்தர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் இந்நாவல், பாரியின் படுகொலையைக் கதைக்களனாகக் கொண்டு உருவானது. விருது பெற்றதற்காக பலரும் எழுத்தாளர் ஜெயஸ்ரீ-க்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here