யூடுயூப் மன்னன் சாப்பாட்டு ராமனுக்கு – இனிமேல் சிறையில் தான் சாப்பாடு!!!

0

சமூக வலைத்தளமான யூடூப்பில்; சாப்புடுறதுக்கும், சாப்பாடு செய்வதற்கும் பல சேனல்கள் இருக்கின்றன; அதில் ஒன்று தான் சாப்பாட்டு ராமன்; சித்த மருத்துவம் படித்த இவர்; ஆங்கில மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுத்ததால் சற்றுமுன் கைது செய்யப்பட்டார்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

யூடுயூப் மன்னன் சாப்பாட்டு ராமன்:

யூடியூபில் எத்தனையோ பிரபலமான யூடியூப் சேனல்கள் இருந்தாலும்; அனைவராலும் விரும்பி பார்க்க கூடிய விஷயம் தான் சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கு பல சேனல்கள் இருந்தாலும்; வண்டி வண்டியாக சாப்பிட்டு அதன் மூலம் பிரபலமானவர் யூடியூப் சாப்பாட்டு ராமன்; தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சித்த மருத்துவர் பொற்செழியன் (சாப்பாட்டு ராமன்) கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகில் உள்ள கிராமத்தில் ஐயப்பன் என்ற பெயரில் நாட்டு மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறார். 60வயதான பொற்செழியன் சித்த மருத்வத்தில் பி இ எம் எஸ் படித்து; கடந்த 28 ஆண்டுகளாக சித்த மருத்துவம் செய்து வருகிறார்.

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பாலோவர்களை பெற்றிருந்த இவர்; கடந்த சில தினங்களாக இவர் எந்த ஒரு சாப்பாட்டு வீடியோவையும் போடவில்லை. அதற்கு விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் பிறகு சித்த மருத்துவரான இவர் ஆங்கில மருந்துகளை பரிந்துரைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார்; சோதனை மேற்கொண்டனர். அங்கே இவர் ஆங்கில மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைப்பது தெரியவந்தது. மேலும், இவரது சிகிச்சை மையத்தில் சில ஆங்கில மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் போலி மருத்துவம் பார்ப்பதாக கூறி அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here