பழனி முருகன் கோவிலுக்கு குறைந்த அளவில் மட்டுமே பக்தர்கள் அனுமதி – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

0

வரும் தைப்பூச விழாவை ஒட்டி மிக குறைந்த அளவில் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பக்தர்கள் எண்ணிக்கைக்கான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

தைப்பூச விழா வைபவம்:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனை அடுத்து மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. மாதங்கள் செல்ல செல்ல மக்களின் தேவை மற்றும் பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு பொது முடக்கம் தற்போது தளர்வுகளுடன் பின்பற்றப்பட்டு வருகின்றது. கோவில்கள் திறக்கப்பட்டாலும், குறைந்த அளவில் மட்டுமே மக்கள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

‘ஜனவரி 20 இல் அதிகார மாற்றம் நிகழும்’ – ஒரு மனதாக சம்மதித்த டிரம்ப்!!

தற்போது கூட கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலில் மிக குறைந்த அளவில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு நாளைக்கு 5000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அதே போல் அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் அடுத்தடுத்து பல விழாக்கள் நடைபெற உள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் முக்கியமான ஒன்று தைப்பூச விழா. இந்த விழாவிற்காக பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிந்து முருக கடவுளை தரிசிக்க செல்வர். அந்த வகையில் இந்த ஆண்டு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மிக குறைந்த அளவில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே பழனி கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி 14 முதல் 31 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here